தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’வடமாநிலங்களில் செய்த சூழ்ச்சி புதுச்சேரியிலும் தொடர்கிறது’

சென்னை: வட மாநிலங்களில் சூழ்ச்சி செய்து ஆட்சிகளை கவிழ்த்த வேலையை, பாஜக புதுச்சேரியிலும் செய்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

maran
maran

By

Published : Feb 22, 2021, 11:57 AM IST

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன்படி, சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்ரமணியன் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையிலும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதேபோன்று, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மு.க.தமிழரசு, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தயாநிதி மாறன், ”பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், மத்திய அரசு பெட்ரோல் விலையை மட்டும் கட்டுக்குள் வைக்காதது ஏன்?

அண்டை நாடுகளில் பெட்ரோல்-டீசல் விலை குறைவாக இருக்கும்போது, இந்தியாவில் மட்டும் ஏன் விலை உயர்ந்து கொண்டே போகிறது என்பதுதான் கேள்வி. எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும்.

தமிழில் பேசும் பிரதமர் தமிழுக்கும் தமிழகத்திற்கும் என்ன செய்தார்? வட மாநிலங்களில் சூழ்ச்சி செய்து ஆட்சியை கவிழ்த்ததை போல, புதுச்சேரியிலும் செய்கின்றனர். அங்கு இத்தனை நாட்களாக ஆளுநரை மாற்றக்கோரி அனைவரும் போராடி வந்தனர். ஆனால், தற்போது ஆளுநரை மாற்றியது எதற்கு?” எனவும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: கட்சிக்கு விசுவாசமா இருங்க? - நாராயணசாமி வேதனை

ABOUT THE AUTHOR

...view details