தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை தலைமைச் செயலகம் முன்பு முதியவர் தீக்குளிப்பு - chennai district news

கொடுத்த கடனை நண்பர் திருப்பித் தராததால் முதியவர் சென்னை தலைமைச் செயலகத்தில் வாயிலின் முன்பு திடீரென தீக்குளித்தார்.

தீக்குளிக்க முயற்சி
தீக்குளிக்க முயற்சி

By

Published : Jun 1, 2022, 2:33 PM IST

Updated : Jun 1, 2022, 4:59 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் வாயிலின் முன்பு திடீரென முதியவர் தீக்குளித்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி, அவரது நண்பரான சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் உள்ள சுப்பிரமணி என்பவருக்கு வட்டி இல்லா கடனாக சுமார் 14 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

தற்கொலை வேண்டாம்..

பணத்தை பெற்ற சுப்பிரமணி பத்தாண்டுகளாக அதனை திருப்பி தரவில்லை. இதுகுறித்து பல முறை பொன்னுசாமி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

தீக்குளிக்க முயற்சி

இதனால் பொன்னுசாமி தீக்குளித்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அவர் 60 விழுக்காடு தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க:மாட்டு வண்டியில் ஒட்டகத்தை பூட்டி மணல் கடத்தல்

Last Updated : Jun 1, 2022, 4:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details