தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுமிக்கு பாலியல் சொந்தரவு அளித்தவர் போக்சோ சட்டத்தில் கைது! - சிறுமிக்கு பாலியல் சொந்தரவு அளித்தவர் போக்சோ சட்டத்தில் கைது

சென்னை: சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

man arrested under pocso
man arrested under pocso

By

Published : Jul 19, 2020, 11:52 PM IST

சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வரும் சிறுமி காணவில்லை என்று அச்சிறுமியின் பாட்டி அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் தொலைந்துபோன சிறுமி திருத்தணியில் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, இன்று அதிகாலை காவல் துறை திருத்தணிக்கு சென்று சிறுமியை மீட்டனர். மேலும் சிறுமியை கடத்தி சென்ற வெங்கடேஷை( 21) காவல் துறையினர் கைது செய்தனர்.

இதுதொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், "சிறுமியை வெங்கடேஷ் அழைத்து சென்று திருத்தணியிலுள்ள அவரது வீட்டில் தங்க வைத்துள்ளார்.

அப்போது சிறுமியை ஒப்படைக்குமாறு வெங்கடேஷிடம் கேட்டுள்ளனர். ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் சிறுமியை ஒப்படைக்க முடியவில்லை. இதனை பயன்படுத்தி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்" என்றனர்.

குற்றவாளி வெங்கடேஷ் மீது போக்‌சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் நள்ளிரவில் தொடரும் பைக் ரேஸ் - 6 இளைஞர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details