தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மக்களைத் தேடி மருத்துவம்: பயனடைந்தது எத்தனை பேர்? - Tamilnadu

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினால் மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 333 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

மக்களைத் தேடி மருத்துவம்
மக்களைத் தேடி மருத்துவம்

By

Published : Aug 31, 2021, 3:08 PM IST

சென்னை: மக்களைத் தேடி மருத்துவத்தின் திட்ட செயல்பாட்டு அறிக்கை இன்று (ஆக. 31) 8 மணிக்கு வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அரசின் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டது.

சேவைகள்

இத்திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்கு சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. 45 வயதிற்கும் மேற்பட்ட உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை அவரவர் இல்லங்களில் வழங்குதல், நோய் ஆதரவு, இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்துகொள்வதற்குத் தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கள அளவிலான குழுவில், பெண் சுகாதார தன்னார்வலர்கள், நோய் ஆதரவு சிகிச்சை செவிலியர்கள், இயன்முறை மருத்துவர்கள், இடைநிலை சுகாதாரச் சேவையாளர்கள் ஆகியோர் இடம் பெறுவர். பொது சுகாதார துறையின் களப்பணியாளர்கள் இக்குழுவினரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்துவார்கள்.

முதற்கட்டமாக, 50 வட்டாரங்களிலுள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மாநகராட்சிகளில் (சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி) தலா ஒரு மண்டலம் என மொத்தம் 21 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், படிப்படியாக இந்த ஆண்டு இறுதிக்குள், மாநிலத்தின் பிற கிராம, நகர்ப்புறப்பகுதிகளில் மக்களை சென்றடையும் வகையில் விரிவுப்படுத்தப்படும்.

இத்திட்டம் தொடங்கப்பட்டு நேற்றுவரை (ஆக. 30)

  • உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுள் – 1,12,944 நபர்களுக்கும்,
  • நீரிழிவு நோய் உள்ளவர்களுள் – 74,275 நபர்களுக்கும்,
  • உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்களுள் – 50,745 நபர்களுக்கும் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது.

மேலும், 8,113 நபர்களுக்கு நோய் ஆதரவு சிகிச்சையும், 8,223 நபர்களுக்கு இயன்முறை சிகிச்சையும் வழங்கப்பட்டது. இதைத் தவிர்த்து 33 சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்துகொள்வதற்குத் தேவையான பைகள் வழங்கப்பட்டது. இத்திட்டத்தினால் மொத்தம் 2,54,333 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: 'போதை பொருள் விற்பனையை தடுக்க சட்ட திருத்தம் - முதலமைச்சர் ஸ்டாலின்'

ABOUT THE AUTHOR

...view details