ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மதுக்கடைகளைத் திறக்க அனுமதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சமூக இடைவெளிகளைப் பின்பற்ற வேண்டும், ஒரு நாளைக்கு ஒருவருக்கு ஒரு மதுபாட்டில் மட்டுமே வழங்க வேண்டும், மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் ஒருவருக்கு மது வழங்க வேண்டும், மதுபானம் வாங்குபவரின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தது.
இந்த நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரி, மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுச்செயலாளரும், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான மவுரியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், ” குடிப்பதற்காக, மதுவிரும்பிகள் வேறு மாநிலங்களுக்குச் செல்லக் கூடும் என்பதால், டாஸ்மாக் கடைகளை திறப்பதாக அரசு கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை.