தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரும்பாக்கம் கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது - சென்னையில் ரூபாய் இருபது கோடி மதிப்பிலான தங்க நகை கொள்ளை

சென்னை அரும்பாக்கம் வங்கி கிளையில் நகைகள் கொள்ளை போன சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான முருகனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 15, 2022, 12:32 PM IST

சென்னை: அரும்பாக்கம் காவல்நிலையத்திற்குட்பட்ட ரச கார்டன் சாலையின் எஸ்பிஐ காலனியில் ஃபெடரல் வங்கியின் கிளை நிறுவனமான ஃபெட் நகைக்கடன் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பணியில் இருந்த காவலாளி சரவணன் என்பவருக்கு மயக்கமருந்து கலந்த கூல்டிரிங்க்ஸ் கொடுத்த கொள்ளையர்கள் அவரை கட்டிபோட்டு விட்டு வங்கிக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்தவர்களை கத்திமுனையில் மிரட்டி நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து சென்னை போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர். இதனிடையே வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தில் 18 கிலோ தங்கம் நேற்று மீட்கப்பட்டது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இக்கொள்ளை சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான முருகனை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் இதில், தொடர்புடையவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அரும்பாக்கம் வங்கி கொள்ளை.. 18 கிலோ தங்கம் மீட்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details