தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரவுடி சங்கரின் உடற்கூறாய்வு அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு! - ரவுடி சங்கர்

சென்னை: என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் உடற்கூறாய்வு அறிக்கையை தாக்கல் செய்ய எழும்பூர் பெருநகர நீதிபதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

shankar
shankar

By

Published : Sep 1, 2020, 5:03 PM IST

சென்னை அயனாவரத்தை சேர்ந்த ரவுடி இளநீர் சங்கர் மீது கொலை முயற்சி, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், அவரை பிடிக்கச் சென்ற காவலர்களை தாக்கியதால், ரவுடி சங்கர் கடந்த 21ஆம் தேதி என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் வழக்கை அயனாவரம் காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி, அவரது தாயார் கோவிந்தம்மாள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன் மகனின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டுமெனவும் அவர் தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் தேசிய மனித உரிமை ஆணைய வழிமுறைப்படி மாஜிஸ்திரேட் முன்னிலையில் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அவை முழுவதும் காட்சிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதலில் உடலை வாங்க குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மறுநாள் உடல் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், உடற்கூறாய்வு செய்யப்பட்ட காட்சிப்பதிவு மாஜிஸ்திரேட் வசம் உள்ளதாகவும், எனவே மறு உடற்கூறாய்வுக்கான அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார். அதேபோல், இவ்வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு கடந்த 25ஆம் தேதி முதல் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

ஆனால், உடற்கூறாய்வின் போது சங்கரின் குடும்பத்தார் உடன் இல்லாததால், மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, உடற்கூறாய்வு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட்டிற்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கில் தானாக முன்வந்து எதிர்மனு தாரராக சிபிசிஐடியை இணைத்து அவர்களை வரும் 4ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மங்கல இசைக்கலைஞர்களுக்கு தனி வாரியம் அமைக்க அரசு பரிசீலிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details