தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் யார்?

சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. துணைவேந்தர் பதவிக்கு 117 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவ்வேளையில் துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக காணொலி காட்சி வாயிலாக நேர்காணல் நடைபெற்றுள்ளது.

madras university
madras university

By

Published : Jul 29, 2020, 5:32 PM IST

சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக காணொலி காட்சி வாயிலாக நேர்காணல் நடைபெற்றுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவின் தலைவராக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து துணைவேந்தர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. துணைவேந்தர் பதவிக்கு 117 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களிடமிருந்து 12 பேரை துணைவேந்தர் தேடுதல் குழுவினர் தேர்வு செய்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான குமார், கணேசன், உஷா நடேசன், கௌரி, முன்னாள் துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் ஆகியோரும்; சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான சகாதேவன், தங்கம் மேனன், ராமன், முருகேசன் உள்ளிட்ட 12 பேரிடம் தேடுதல் குழுவின் தலைவர் ஜெகதீஷ் குமார் காணொலி காட்சி வாயிலாக நேற்று ( ஜூலை 28) ஆலோசனை நடத்தியுள்ளார்.

மதன் ரவிச்சந்திரன் மீது உதயநிதி ஸ்டாலின் அவதூறு வழக்கு!

அதனடிப்படையில் மூன்று பேர் கொண்ட பட்டியலை தமிழ்நாடு ஆளுநருக்கு விரைவில் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிகிறது. அவர்களில் ஒருவரை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம் செய்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details