விழுப்புரத்தை சேர்ந்த கார்த்திக் நாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தின் உள்ள மிட்டா மண்டகப்பட்டு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 100 ஏக்கர் நீர்ப்பிடிப்பு நிலம் உள்ளது. இந்த நிலத்தை இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவாக கொடுப்பதற்கு மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் முயற்சி செய்துவருகிறது.
இதனால் நீர் ஆதாரம் மட்டுமின்றி, மழைக்காலங்களில் இருளர் இன மக்களும் பாதிக்கக்கூடும். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் மனு கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே, நீர்ப்பிடிப்பு பகுதிக்கேற்ப களம் என்று வகைப்படுத்தப்பட்ட இந்த நிலத்தை, வீட்டு மனை பட்டா திட்டத்திற்காக நத்தம் என்று வகை மாற்றம் செய்யக்கூடாது என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்.