தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

CJ Sanjib Banerjee transfer: தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மாற்றத்துக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம்!

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை (Sanjib Banerjee) மேகாலயாவுக்கு மாற்றம் செய்வதை எதிர்த்து வழக்கறிஞர்கள் சார்பாக உயர் நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்

By

Published : Nov 15, 2021, 7:45 PM IST

Updated : Nov 15, 2021, 8:02 PM IST

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி (Sanjib Banerjee) கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். 2023ஆம் ஆண்டு ஓய்வு பெறவுள்ள இவரை தற்போது மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

75 நீதிமன்றங்களோடு 'சார்டர்ட் உயர் நீதிமன்றம்' என்ற பெருமை கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து நான்கு நீதிபதிகள் மட்டுமே கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு சஞ்ஜீப் பானர்ஜியை மாற்ற பரிந்துரைக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.

இந்த முடிவை மறு பரிசீலனை செய்யக்கோரி ஏற்கனவே 237 வழக்கறிஞர்கள் (Madras Bar Association opposes transfers of CJ Sanjib Banerjee) உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். மேலும், இதனை எதிர்த்து மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ். ராமன், அரவிந்த் பாண்டியன், நளினி சிதம்பரம், என்.ஆர் இளங்கோ உள்ளிட்ட 31 பேர் தற்போது உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

அதில், “நீதிபதிகளின் இடமாற்றம் என்பது பொது நலன் மற்றும் நீதித்துறை நிர்வாக நலனை கருத்தில் கொண்டு மட்டுமே நடைபெற வேண்டும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், சஞ்ஜிப் பானர்ஜியின் இடமாற்றம் எதன் அடிப்படையில் நடைபெறுகிறது எனத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குறைந்தப்பட்சம் 2 ஆண்டுகளாவது சென்னை உயர் நீதிமன்றத்தில் சஞ்ஜிப் பானர்ஜி பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத் தலைமையில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கள் போராட்டத்தில், தலைமை நீதிபதியை மாற்றும் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரை உடனே திரும்ப பெற வேண்டும் என்ற பதாகைகளுடன், கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதனால் உயர் நீதிமன்றத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:ஆன்லைன் தேர்வு வேண்டும் - மாணவர்கள் போர்க்கொடி!

Last Updated : Nov 15, 2021, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details