பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி - மதன் சிறையில் அடைப்பு
15:07 June 29
பப்ஜி மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை தனது யூடியூப்பில் வெளியிட்டு வந்தவர் மதன். இதனால் பப்ஜி மதனை கைது செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில் மதன் மீது ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர். பின்னர் தருமபுரியில் தலைமறைவாக இருந்த மதனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனு சைதாப்பட்டை நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.