தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊரடங்கு நீட்டிப்பு - புத்தாண்டைக் கொண்டாட கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதியில்லை

கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக, ஊரடங்கினை வரும் டிசம்பர் 31 வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு - புத்தாண்டைக் கொண்டாட கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதியில்லை
ஊரடங்கு நீட்டிப்பு - புத்தாண்டைக் கொண்டாட கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதியில்லை

By

Published : Dec 13, 2021, 8:54 PM IST

சென்னை: சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச.13) ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் முடிவில், பரவி வரும் உருமாறிய கரோனா - ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் டிசம்பர் 31 வரை நீட்டித்தும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பண்டிகை காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூடுவதால், கரோனா நோய்த்தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போதுள்ள தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், வரும் டிசம்பர் 31 மற்றும் வரும் ஜனவரி 01 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'நெற்றியில் பட்டை அடித்துக்கொண்டால் சேகர்பாபுவின் பழைய வரலாறு மறந்துவிடுமா?'

ABOUT THE AUTHOR

...view details