தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உள்ளாட்சி உங்களாட்சி 7 - கிராம வளர்ச்சித் திட்டங்கள் - உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சி உங்களாட்சியின் கடந்த பகுதியில் நிலைக்குழுக்கள் என்றால் என்ன என்பது குறித்துப் பார்த்தோம். தற்போது கிராம வளர்ச்சித் திட்டங்கள் குறித்து காண்போம்.

உள்ளாட்சி
உள்ளாட்சி

By

Published : Nov 30, 2019, 1:29 PM IST


ஒரு ஊராட்சிக்கு, மிக மிக முக்கியமானது கிராம வளர்ச்சித் திட்டம் எனப்படுவது. ஏனெனில், ஊராட்சி முன்மாதிரி ஊராட்சியாக வேண்டும் என்பதை இலக்காக வைத்துக்கொண்டு இந்தத் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் நமது கிராமத்தின் தேவைகளை முன்னேற்ற தமிழ்நாடு அரசுதான் திட்டங்கள் தீட்ட முடியும் என்றில்லை. நம் கிராமத்தின் முன்னேற்றத்திற்கு “நமக்கு நாமே” திட்டங்களை விவாதித்து, திட்டமிட்டு நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இந்த கிராம வளர்ச்சித் திட்டங்களில் பொதுமக்கள் பங்கெடுப்பது அவசியம். ஊராட்சி மன்றத்தை அணுகி, கிராம சபைகளில் பங்கேற்று திட்டத்தினை நெறிப்படுத்த வேண்டும்.

முக்கியமாக, தயாரிக்கப்படும் கிராம வளர்ச்சித் திட்டமானது எந்தவித பாகுபாடுமின்றி உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் இது கிராமத்தில் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல் சமத்துவம் திகழும். சமத்துவம் திகழ்ந்தால்தான் அந்த கிராமம் சிறந்த முன்னுதாரண கிராமமாக இருக்கும்.

கிராமங்களில் இருக்கும் பொதுச் சொத்துகளை பராமரிக்க வேண்டியது ஊராட்சியின் கடமை. உதாரணமாக ஊராட்சியில் உள்ள தெரு விளக்குகள், நீர் நிலைகள் என அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட வேண்டும்.

அதுமட்டுமின்றி, பொது இடத்தில் தனியாரைச் சேர்ந்த நிறுவனம் ஏதேனும் ஆக்கிரமிப்பு செய்திருந்தால், கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு அதனை அகற்றலாம்.

தமிழ்நாடு அரசு பல நலத் திட்டங்களை ஊராட்சியில் மேற்கொள்கிறது. அதில், பசுமை வீடுகள் திட்டம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார வளாகங்கள் உள்ளிட்டவை முக்கியமானத் திட்டங்களாகும்.

மேற்கூறிய திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு முறையாகச் சென்றடைந்ததா என்பதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஊராட்சியில் மத்திய அரசு பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் ஆகியவைகள் ஊராட்சிகள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

கிராம வளர்ச்சித் திட்டங்களில் நூறு நாள் வேலைத் திட்டம் மூலம் கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். இருந்தாலும் உழைக்கும் மக்களுக்கு முறையாக ஊதியம் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துவருகிறது. எனவே வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகாவது இந்த குறைகள் களையப்பட வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details