தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வேட்புமனுதாக்கல் விவரம் வெளியீடு

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களின் விவரங்களை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

By

Published : Sep 23, 2021, 5:26 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது. கடந்த 15ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுதாக்கல் நேற்று (செப்.22) மாலை உடன் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று (செப்.23) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வரும் 25ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.

மேலும், வரும் 27ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில் வேட்புமனுதாக்கல் செய்தவர்களின் விவரங்களை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட விவரங்கள்

இதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 72ஆயிரத்து 71 பேர், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 15ஆயிரத்து 967 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 8ஆயிரத்து 671 பேர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆயிரத்து 122 பேர் என மொத்தம் 97ஆயிரத்து 831 பேர் மொத்தமாக மனுதாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நெல்லையில் வேட்புமனு பரிசீலனை தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details