தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆன்லைன் லோன் ஆப்... ஒரு நாளைக்கு  45,000 பேரிடம் மோசடி... சிக்கிய வொர்க் பிரம் ஹோம் கும்பல்... - Utthara pradesh andharyana

ஆன்லைன் லோன் ஆப் மூலம் நாடு முழுவதும் 45,000 பேரிடம் கைவரிசை காட்டிய வொர்க் பிரம் ஹோம் கும்பல் சிக்கியது.

Etv BharatWork from Home இல் 50 பேர் கொண்ட லோன் ஆப் மோசடிக் கும்பல் - ஒரு நாளுக்கு ஒரு கோடி மோசடி
Etv BharatWork from Home இல் 50 பேர் கொண்ட லோன் ஆப் மோசடிக் கும்பல் - ஒரு நாளுக்கு ஒரு கோடி மோசடிWork from Home இல் 50 பேர் கொண்ட லோன் ஆப் மோசடிக் கும்பல் - ஒரு நாளுக்கு ஒரு கோடி மோசடி

By

Published : Sep 3, 2022, 7:36 AM IST

Updated : Sep 3, 2022, 9:35 AM IST

சென்னை:நாடு முழுவதும் ஆன்லைன் லோன் ஆப் மோசடி அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஆன்லைன் லோன் ஆப் மூலம் ஒரு கும்பல் தங்களை தொடர்ச்சியாக மிரட்டி பணம் பறித்துவருவதாக சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு 5 புகார்கள் வந்தன. அந்த புகாரில் பணம் செலுத்திய பின்னும் லோன் ஆப் மோசடிக்காரர்கள் செல்போன்களை ஹேக் செய்து அதில் இருக்கும் புகைப்படங்களை எடுத்து மார்ஃபிங் செய்து, ஆபாச புகைப்படங்களாக சித்தரித்து எங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பிதாக தெரிவிக்கப்பட்டது.

தனிப்படை விசாரணை:இந்த புகார்களின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது 200-க்கும் மேற்பட்ட ஈமெயில் முகவரிகள், வங்கி கணக்குகள், வாட்ஸ்அப் எண்கள் சேகரிக்கப்பட்டன. இந்த மோசடி கும்பல் உத்திரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து செயல்படுவது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து லோன் ஆப் கலெக்சன் ஏஜென்டாக இருந்துவந்த தீபக்குமார் பாண்டே (26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஹரியானா மாநிலம் துண்டகேரா பகுதியைச் சேர்ந்த ஜிதேந்தர் தன்வர் (24) மற்றும் அவரது சகோதரியும் டீம் லீடருமான நிஷா (22) இருவரும் கைது செய்யப்பட்டனர். அதன்பின் டீம் மேனேஜரான டெல்லியை சேர்ந்த பிரகாஷ் சர்மா (21) என்பவர் கைது செய்யப்பட்டார்.

வொர்க் பிரம் ஹோம் கும்பல்:முதல்கட்ட விசாரணையில்,கைது செய்யப்பட்ட 4 பேரும் 50 பேர் கொண்ட வொர்க் பிரம் ஹோம் கும்பலை வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அந்த 50 பேருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது. Cash coin, Cash world, New Credit, Gold Money, Best rupee, Rupee Handy, Sam Cash, Home Cash, Dutta Rupee, Royal Cash, Open Credit, Table Cash, Buddy Cash, Home Case, Loan Bro-M, Handy Loan, West Cash, Small Credit உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட லோன் ஆப்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த லோன் ஆப்களை உருவாக்க ஒரு சாப்ட்வேர் டெவலப்பர் டீம், புகைப்படங்களை மார்ஃபிங் செய்ய ஒரு போட்டோ ஷாப் டீம் செயல்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சுமார் ரூ.1 கோடி வரை பொதுமக்களிடமிருந்து பணம் பறித்து வந்துள்ளனர். அந்த பணத்தை வைத்து புதிய வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர்.

பட்டப்படிப்பு படித்துக் கொண்டே பார்ட் டைமாக மோசடி:கைது செய்யப்பட்டநிஷா, ஜித்தந்தர் தன்வர், பிரகாஷ் சர்மா மூவரும் பட்டப்படிப்பு படித்துக் கொண்டே இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களால் நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 45 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்த கும்பலின் தலைவன் இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இவர்களை இயக்குவதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், 7 லேப்டாப்கள் மற்றும் 19 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுவருகின்றன.இவர்களது 37 மோசடி ஆன்லைன் லோன் ஆப்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:சென்னை விமானநிலையத்தில் ரூ.88 லட்சம் மதிப்புடைய ரத்தினக்கற்கள் உள்ளிட்டவை பறிமுதல்...மூவர் கைது

Last Updated : Sep 3, 2022, 9:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details