தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சட்டப்பேரவை தேர்தல் 2021! - விசிக உத்தேசப் பட்டியல்! - திமுக கூட்டணி

சென்னை: நான்கு தனித் தொகுதிகள் மற்றும் இரண்டு பொதுத் தொகுதிகள் என ஆறு தொகுதிகளுக்குமான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.

vck
vck

By

Published : Mar 6, 2021, 8:06 PM IST

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தங்களுக்கான தொகுதிகள் அனைத்திலும் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

என்னென்ன தொகுதிகள் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், விசிக போட்டியிடும் உத்தேச தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி,

  • செய்யூர் (தனி) - பனையூர் பாபு
  • காட்டுமன்னார்கோவில் (தனி) - சிந்தனைச் செல்வன்
  • திட்டக்குடி (தனி) - பார்வேந்தன்
  • புவனகிரி (தனி) - எழில் கரோலின்
  • மயிலம் - பாலாஜி
  • உளுந்தூர்பேட்டை - முகமது யூசுப்

ஆகியோர் போட்டியிடவுள்ளதாக விசிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: மதிமுகவுக்கு 6 தொகுதிகள் - உதயசூரியன் சின்னத்தில் போட்டி!

ABOUT THE AUTHOR

...view details