தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெண் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்! - காவல் ஆய்வாளர் நசீமா மீதும் துறை ரீதியான நடவடிக்கை

சட்டக்கல்லூரி மாணவன் தாக்குதலுக்கு காரணமான பெண் ஆய்வாளர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாணவர்கள்
மாணவர்கள்

By

Published : Jan 20, 2022, 11:09 PM IST

சென்னை: கொடுங்கையூர் எம்ஆர் நகர் சந்திப்பு அருகே ஜன.13ஆம் தேதி அதிகாலை கொடுங்கையூர் காவல்துறை வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது வியாசர்பாடி புது நகர்ப் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் (வயது 21) என்ற இளைஞர் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தார்.

முகக்கவசம் அணியாமல் சென்றதால் காவல்துறை அவரிடம் முகக்கவசம் அணியும் படி அறிவுறுத்தினர்.அப்போது காவல்துறைக்கும் அப்துல் ரஹீமுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அப்துல் ரஹீம் அங்கு பணியிலிருந்த காவலர் உத்திர குமாரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது

இதனையடுத்து உத்திர குமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் காவல்துறையினர் அப்துல்லை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆணையர் உத்தரவு

இந்நிலையில், அப்துல் ரஹீமை கைது செய்த காவல்துறை அவரை கடுமையாகத் தாக்கியதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அப்துல் ரஹீம் தரப்பில் சென்னை மாநகர ஆணையருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

சென்னை மாநகர ஆணையர் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதில் தொடர்புடைய கொடுங்கையூர் காவலர் உத்தர குமார் மற்றும் ஏட்டுப் பூமிநாதன் ஆகிய இருவரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

பின்னர் இருவரும் துறை ரீதியான நடவடிக்கை உட்படுத்தப்பட்ட பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து சம்பவத்திற்கு மூலகாரணமான ஆய்வாளர் நசீமாவை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தினர்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம்

சென்னை ஓட்டேரியில் உள்ள புளியந்தோப்பு துணை ஆணையர் அலுவலகத்தில் ஜன.20ஆம் தேதியான இன்று மதியம் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குற்ற நடவடிக்கை

அப்போது கூட்டத்தில் பேசிய வழக்கறிஞர், அப்பாவி சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்திய இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது போதாது எனவும் அவர்கள் இருவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி இல்லை எனவும் மேலும், காவல் ஆய்வாளர் நசீமா மீதும் துறை ரீதியான நடவடிக்கை மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை ஆணையர் ஈஸ்வரன், பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பள்ளி மாணவி தற்கொலை - கட்டாய மதமாற்றம் காரணமா?

ABOUT THE AUTHOR

...view details