சென்னை கிழக்கு தாம்பரம் இரும்புலியூர், சுத்தானந்த பாரதி தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் (66). இவர், தாம்பரம் நகர அதிமுக பொருளாளராக இருந்தவர். தற்போது தாம்பரம் நகர கூட்டுறவுச் சங்கத் தலைவராக உள்ளார்.
நில மோசடியில் ஈடுபட்ட தாம்பரம் கூட்டுறவுத் தலைவர் கைது! - காவல் துறை
சென்னை : தாம்பரம் நகர கூட்டுறவுத் தலைவரை நில மோசடி குற்றத்துக்காக தேடிவந்த நிலையில் தற்போது அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
நில மோசடியில் ஈடுபட்டவர் கைது
கடந்த சில மாதத்திற்கு முன்பு, இரும்புலியூர் சர்ச் அருகே உள்ள 18 ஏக்கர் நிலத்தை கோவையைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவி விசித்ராவுக்கு ரூ. 5.50 கோடிக்கு விற்பனை செய்துள்ள குற்றத்திற்காக மத்திய குற்றப்பிரிவில் வழக்கு இவர் மீது பதிவாகியிருந்தது.
இதன் அடிப்படையில் மாணிக்கம், மணி, குமார், முத்து, எட்வின் ஆகிய ஐந்து நபர்களை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், அதிமுக தாம்பரம் நகர கூட்டுறவுத் தலைவர் மாணிக்கத்தை கைது செய்துள்ளனர்.
Last Updated : Sep 12, 2019, 9:33 AM IST