தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நடிகர் மம்முட்டியின் நிலத்தின் மீது வழக்கு - நில நிர்வாக ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு - நில நிர்வாக ஆணையம்

நடிகர் மம்முட்டிக்கு சொந்தமான நிலத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என நில நிர்வாக ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் மம்முட்டியின் நிலத்தின் மீது வழக்கு
நடிகர் மம்முட்டியின் நிலத்தின் மீது வழக்கு

By

Published : Aug 12, 2021, 4:00 PM IST

செங்கல்பட்டு: நில நிர்வாக ஆணையர் கடந்த மார்ச் 16ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், செங்கல்பட்டு மாவட்டம், கருகுழிப்பள்ளம் பகுதியிலுள்ள நிலத்தை 'கழிவெளி புறம்போக்கு' எனவும், அது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியைச் சேர்ந்தது எனவும் மாவட்ட வருவாய் துறைக்கு உத்தரவிட்டது.

நில நிர்வாக ஆணையரின் இந்த உத்தரவை எதிர்த்து, மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி என்கிற முகம்மது குட்டி, அவரது குடும்பத்தினர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அதில், 'செங்கல்பட்டு மாவட்டம், கருகுழிப்பள்ளம் பகுதியில் 247 ஏக்கர் விவசாய நிலத்தின் ஒருபகுதியாக 40 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர் சிரூர், செலுத்த வேண்டிய அடமானத் தொகையை சரியாக செலுத்தாததால், 1933ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர்களால் ஏலம் விடப்பட்டு, தங்கள் குடும்பத்தினரால் வாங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

வழக்கு ஒத்திவைப்பு

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன், இந்த விவகாரத்தில் நிலம் வகைபடுத்துதலில் தவறு செய்த அலுவலர்கள் மீது குற்ற நடவடிக்கையோ அல்லது துறை ரீதியான நடவடிக்கை என்ன எடுக்கப்பட்டுள்ளது என நில நிர்வாக ஆணையம் தரப்பில் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், மனுதாரர்களின் நில விவகாரம் தொடர்பாக நீதிமன்ற மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, எந்தவித துரித நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது, எனக் கூறி இந்த வழக்கை ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: ஆக.16க்கு விசாரணை ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details