தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை - விடுமுறை

சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 1,629 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தொழிலாளர் நலத்துறை அதிரடியாக தெரிவித்துள்ளது.

department
department

By

Published : Oct 5, 2020, 4:55 PM IST

தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைச் சட்டம் 1958 இன் படி, தேசிய விடுமுறை நாட்களான குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாட்களும், இது தவிர ஐந்து பண்டிகை விடுமுறை நாட்கள் ஆக மொத்தம் ஒன்பது நாட்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு விடுமுறை அளிக்காத கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், தொழிலாளர்களை அன்றைய தினம் பணிக்கு அமர்த்தினால், அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை ஆணையர் நந்தகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காந்தி ஜெயந்தி அன்று தமிழ்நாடு தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை சட்டத்தின் விதிமுறைகளை மீறுவோர் மீது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க, அனைத்து மாவட்ட தொழிலாளர் துறை அலுவலர்களால் கடைகள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை சட்ட விதிகளை மீறியதற்காக உள்ள 820 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 720 உணவு நிறுவனங்கள், 77 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், 11 தோட்ட நிறுவனங்கள், 1 பீடி தயாரிக்கும் நிறுவனம் என மொத்தம் 1,629 நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அக்டோபர் 31 வரை மெரினாவில் அனுமதி இல்லை - மாநகராட்சி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details