தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அனுமதியின்றி இயங்கிய தண்ணீர் ஆலைக்கு சீல் - தண்ணீர் ஆலை

திருவள்ளூர்: உரிய ஆவணங்களின்றியும், அனுமதியின்றியும் இயங்கி வந்த தண்ணீர் கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

company
company

By

Published : Feb 25, 2020, 12:43 PM IST

திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கத்தில் உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதியின்றி தண்ணீர் ஆலை இயங்கி வருவதாக வந்தத் தகவலையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது உரிய அனுமதி பெற்று திறக்க வேண்டுமென அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கி விட்டுச் சென்றனர்.

அதன் பின்னரும் உரிய அனுமதி பெறாமல் தண்ணீர் ஆலை இயங்கி வந்ததால் திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ தலைமையில் தண்ணீர் ஆலைக்கு விரைந்து சென்ற வருவாய்த் துறை அதிகாரிகள், அங்கு ஆய்வு செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் மீண்டும் செயல்பட்டு வந்ததையடுத்து, தண்ணீர் ஆலையை மூடி சீல் வைத்தனர். உரிய அனுமதி பெற்ற பின்பு வைக்கப்பட்ட சீல் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனுமதியின்றி இயங்கிய தண்ணீர் ஆலைக்கு சீல்!

இதையும் படிங்க:பருப்பு, பாமாயில் விநியோகம் மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details