தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விவசாய உதவித் திட்ட மோசடி - அனைத்து ஆட்சியர்களிடமும் மனு அளிக்க பாஜக திட்டம் - தமிழ்நாடு பாஜக

சென்னை: பிரதமர் விவசாய நிதியுதவி திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேட்டிற்கு எதிராக பாஜக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியரிடமும் நாளை (செப்டம்பர் 7) புகார் மனு அளிக்க உள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் முருகன்
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் முருகன்

By

Published : Sep 6, 2020, 4:41 PM IST

இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பிரதமர் விவசாய நிதி உதவித் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 9.5 கோடி பேர் பயன்பெற்று வருகின்றனர். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் என ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு இந்த திட்டத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. அவ்வாறு தமிழ்நாட்டில் 40 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர்.

நலிவுற்ற விவசாயிகள், விவசாயப் பணிகளை எந்தவித இடற்பாடும் இன்றி மேற்கொள்ள வேண்டும் என வழங்கப்பட்ட இத்திட்டத்தில் அரசின் விதிமுறைகளை தவறுதலாக பயன்படுத்தி பலர் மோசடியில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது. இது மிகப்பெரிய குற்றமாகும்.

இந்தாண்டு மட்டும் இந்தத் திட்டத்தில், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், கரூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் திடீரென புதிதாக 40 ஆயிரம் பேர் வரை இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முதல் தவணைத் தொகை 2000 ரூபாய் வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் அல்லாத பல்லாயிரக்கணக்காணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மிகப் பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. எனவே இந்த திட்டம் குறித்து அரசு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும் மோசடி செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நாளை காலை 11 மணிக்கு பாஜக சார்பில் மனு அளிக்கப்பட உள்ளது. இது குறித்து மாநில அரசு சிறப்பு விசாரணைக்குழு ஏற்படுத்தி தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேணடும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:விவசாய ஊக்க நிதித் திட்டம் - போலி பயனாளிகளிடமிருந்து ரூ. 28 லட்சம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details