தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தக்காளியை தொடர்ந்து சதமடித்த பீன்ஸ், அவரைக்காய்!

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியை தொடர்ந்து பீன்ஸ் மற்றும் அவரைக்காய் இன்று சதமடித்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலையும் கிடு கிடு வென உயர்ந்துள்ளது.

தக்காளியை தொடர்ந்து சதமடித்த பீன்ஸ், அவரைக்காய்..!
தக்காளியை தொடர்ந்து சதமடித்த பீன்ஸ், அவரைக்காய்..!

By

Published : May 22, 2022, 8:58 AM IST

சென்னை: கோயம்பேடு மார்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து வழக்கத்தைவிட வரத்து குறைவு என்பதால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு உட்பட ஒரு சில மாநிலங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய (மே. 21) தினம் ஒரு கிலோ ரூ.80-க்கு தக்காளி ரூ.90-க்கும், ரூ.60-க்கு விற்ற பீன்ஸ் ரூ.10-க்கும், ரூ.80-க்கு விற்ற அவரைக்காய் ரூ.100-க்கும், ரூ.25-க்கு விற்ற கேரட் ரூ.35-க்கும், பீன்ஸ் ரூ.60 இல் இருந்து ரூ.100-க்கும், கத்தரிக்காய் ரூ.30 இல் இருந்து ரூ.40-க்கும், குடை மிளகாய் ரூ.40 இல் இருந்து ரூ.50-க்கும் விலை உயர்ந்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய (மே. 22) விலை நிலவரம்:

  • அவரைக்காய் ரூ.100
  • நெல்லிக்காய் ரூ.50
  • மக்காச்சோளம் ரூ.85
  • பீன்ஸ் ரூ.100
  • பீட்ரூட் ரூ.40
  • பாவற்காய் ரூ.30
  • கத்திரிக்காய் ரூ.40
  • முட்டைகோஸ் ரூ.18
  • குடை மிளகாய் ரூ.40
  • கேரட் ரூ.25
  • காலிபிளவர் ரூ.25
  • கொத்தவரை ரூ.169
  • சின்ன தேங்காய் ரூ.25
  • பெரிய தேங்காய் ரூ.28
  • வெள்ளரி ரூ.15
  • முருங்கைக்காய் ரூ.70
  • பெரிய பூண்டு ரூ.160
  • சின்ன பூண்டு ரூ.150
  • இஞ்சி ரூ.45
  • பச்சை பட்டாணி ரூ.90
  • பச்சை மிளகாய் ரூ.25
  • கருணைக்கிழங்கு ரூ.50
  • கோவக்காய் ரூ.20
  • வெண்டைக்காய் ரூ.50
  • மாங்காய் ரூ.30
  • மரவள்ளி ரூ.67
  • நூக்கல் ரூ.25
  • பெரிய வெங்காயம் ரூ.14
  • சாம்பார் வெங்காயம் ரூ.25
  • பீர்கங்காய் ரூ.89
  • உருளைக்கிழங்கு ரூ.27
  • முள்ளங்கி ரூ.15
  • சேனைகிழங்கு ரூ.20
  • சேப்பங்கிழங்கு ரூ.48
  • புடலங்காய் ரூ.50
  • சுரைக்காய் ரூ.20
  • பெங்களூர் தக்காளி ரூ.90
  • லோக்கல் தக்காளி ரூ.90
  • வாழைப்பூ ரூ.30
  • வாழை தண்டு ரூ.6.50
  • பூசணி ரூ.26

இதையும் படிங்க:வரி குறைப்புக்கு பின் பெட்ரோல், டீசல் விலை - சென்னை நிலவரம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details