சென்னையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளில் நோய்த்தொற்று குறைந்தாலும் அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற இடங்களில் தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. சென்னையில் மொத்தம் 92 ஆயிரத்து 206 நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: ராயபுரத்தை பின்னுக்கு தள்ளிய கோடம்பாக்கம்! - சென்னையில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை
சென்னை: கரோனா பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையில் ராயபுரத்தை பின்னுக்கு தள்ளி கோடம்பாக்கம் முன்னிலை வகிப்பதாக மாநகராட்சி ஆணையம் தெரிவித்துள்ளது.
அதில் 76 ஆயிரத்து 494 நபர்கள் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். மீதமுள்ள 13 ஆயிரத்து743 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1, 969 நபர்கள் இறந்துள்ளனர். இந்த நிலையில் கரோனா பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையில் சென்னையின் ஹாட் ஸ்பாட் என சொல்லக்கூடிய ராயபுரத்தை பின்னுக்கு தள்ளி சென்னையில் 10 ஆயிரத்து 692 நபர்கள் பாதிக்கப்பட்டு கோடம்பாக்கம் மண்டலம் முதல் இடத்தில் உள்ளது.
இந்தநிலையில் சென்னையில் கரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அந்த விவரம் வருமாறு:-
வஎண் | மண்டலங்கள் | பாதிப்பு |
01 | கோடம்பாக்கம் | 10, 692 |
02 | ராயபுரம் | 10, 537 |
03 | அண்ணா நகர் | 10, 511 |
04 | திரு.வி.க. நகர் | 7, 375 |
05 | வளசரவாக்கம் | 4, 817 |
06 | தண்டையார்பேட்டை | 8, 978 |
07 | தேனாம்பேட்டை | 9, 987 |
08 | அம்பத்தூர் | 4, 798 |
09 | திருவொற்றியூர் | 3, 367 |
10 | அடையாறு | 6, 296 |
11 | மாதவரம் | 2, 854 |
12 | மணலி | 1, 640 |
13 | சோழிங்கநல்லூர் | 2, 052 |
14 | பெருங்குடி | 2, 465 |
15 | ஆலந்தூர் | 2, 724 |
இதையும் படிங்க: அப்துல் கலாம் நினைவு நாளில் ஆன்லைனில் அஞ்சலி செலுத்தும் கமல்ஹாசன்