புத்தர் தனது முதல் போதனையை செய்த தினமாக கருதப்படும் குரு பூர்ணிமா தினம் இன்று(ஜூலை 4) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து நடிகையும் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நன்றி அப்பா; குரு பூர்ணிமாவிற்கு கருணாநிதிக்கு நன்றி தெரிவித்த குஷ்பூ - கலைஞர்
குரு பூர்ணிமாவான இன்று நடிகையும் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நன்றி அப்பா; குரு பூர்ணிமாவிற்கு கருணாநிதிக்கு நன்றி தெரிவித்த குஷ்பூ
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”குரு பூர்ணிமாவான இன்று என்னை அரசியலுக்கு அழைத்து வந்து, மனிதம், சமத்துவம், மற்றும் சுய மரியாதையை விட எதுவும் பெரிதில்லை என சொல்லித்தந்த டாக்டர் கருணாநிதி எப்போதும் என்னில் நினைவுகூரப்படுவார். நன்றி அப்பா” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:"கருணாநிதி இருந்திருந்தால்..!" வைரமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்