தமிழ்நாட்டில் மிகப்பெரிய மீன்பிடி துறைமுகமான காசிமேட்டில் உள்ள மீன் சந்தையில் மீன் வாங்க சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான சில்லறை வியாபாரிகள், வாடிக்கையாளார்கள் கூடுவர்.
கரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு கூட்டம் கூடுவது தவிர்க்கப்படுவந்தது. அதையடுத்து ஞாயிறுகளில் தளர்வுகளில்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால், சனிக் கிழமைகளில் மக்கள் கூட்டம் காசிமேடு மீன் சந்தையில் குவிந்து சர்ச்சையை கிளப்பி தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து நான்காம் கட்ட ஊரடங்கில் ஞாயிறுகளில் முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
இந்த நிலையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப் படகுகளில் இருந்து பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனை செய்வதற்காக சென்னை மாநகராட்சி, காவல்துறையினர் மீனவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் மீன் விற்பதற்கான கட்டுப்பாடுகளை விதித்து அதிகாலை 3 மணி முதல் காலை 7 மணி வரை விற்பனை செய்யவேண்டும் என் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் இன்று (செப்டம்பர் 13) அதிகாலை ஒரு மணி முதல் மீன்களை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் தகுந்த இடைவெளி கேள்விக் குறியாக தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:காசிமேடு மீன் விற்பனைக் கூடத்தில் குவிந்த மக்கள் - கரோனா தொற்று பரவும் அபாயம்