தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த மேலும் இருவருக்கு நீதிமன்றக் காவல்!

சென்னை: கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த மேலும் இருவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

koottam
koottam

By

Published : Jul 21, 2020, 6:56 PM IST

கந்தசஷ்டி கவசம் குறித்து விமர்சனம் செய்து பதிவு ஒன்று கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டிருந்தது. அது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நாத்திகன் என்ற சுரேந்தர், செந்தில்வாசன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். சுரேந்தரை வரும் 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கறுப்பர் கூட்டம் சேனலின் ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம், படத்தொகுப்பாளர் குகன் ஆகிய இரண்டு பேரையும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் நேற்று (ஜூலை 20) கைது செய்தனர். இருவரையும் எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நடுவர் ரோஸ்லின் துரை முன்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் இன்று ஆஜர்படுத்தினர்.

அவர்கள் மீதான வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர், சோமசுந்தரம், குகனை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில், சுரேந்தர், செந்தில் வாசன் ஆகிய இருவரையும் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: கறுப்பர் கூட்டம் இணையதளப் பதிவுகள் அனைத்தும் நீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details