தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாதிரியார் பொன்னையா போன்றோரை ஸ்டாலின் டூல்-கிட்டாக பயன்படுத்துகிறாரா - கரு.நாகராஜன் சந்தேகம் - கரு நாகராஜன்

பிரதமருக்கும், பாஜகவுக்கும் களங்கத்தை ஏற்படுத்துவதற்காக பாதிரியார் பொன்னையா போன்றவரை டூல்-கிட்டாக முதலமைச்சர் ஸ்டாலினே அனுப்பி வைத்துள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது என பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கரு நாகராஜன்
கரு நாகராஜன்

By

Published : Jul 22, 2021, 11:23 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்.கனகராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய கரு.நாகராஜன்," தேசிய புலனாய்வு பிரிவில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் பிணை மறுக்கப்பட்ட ஸ்டைன் சுவாமியின் அஸ்திக்கு மாநிலத்தின் முதலமைச்சரே அஞ்சலி செலுத்தியது தவறு. தமிழ்நாடு முதலமைச்சர் இதுபோன்ற செயல்படுவதால் பலரும் பிரிவினையை உண்டாக்கி வருகின்றனர்.

என்ஐஏவிற்கு கொண்டு செல்வோம்

கரு.நாகராஜன் செய்தியாளர் சந்திப்பு

பாதிரியார் பொன்னையா போன்று தவறான கருத்தை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. திட்டமிட்டு பிரதமருக்கும், பாஜகவிற்கும் களங்கத்தை ஏற்படுத்துவதற்காக பேசியவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், பாதிரியார் பொன்னையா போன்றவரை டூல்-கிட்டாக முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது. தமிழ்நாடு பாஜக இதை என்ஐஏ கவனத்திற்கு கொண்டு செல்வதோடு போராட்டமும் நடத்தும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நான் பிராமணனாக உணர்கிறேன் - சுரேஷ் ரெய்னா பேச்சுக்கு ரசிகர்கள் கொந்தளிப்பு

ABOUT THE AUTHOR

...view details