தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’அப்பனே முருகா...என்று கூறுபவர்களிடமே வேல் யாத்திரையா?’

சென்னை: ஐதீகத்திலோ, பழக்கவழக்கத்திலோ இல்லாத வேல் யாத்திரையை பாஜகவினர் திட்டமிட்டு திணிப்பதாக சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

chithambaram
chithambaram

By

Published : Nov 9, 2020, 5:50 PM IST

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “ சென்னை அருகே பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்ட நிகழ்வு வருத்தமளிக்கிறது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் பழனி தேவஸ்தான டிரஸ்டியாக இருந்தவன். தீபாவளிக்கு முன் வேல் யாத்திரை செல்லும் ஐதீகமோ, பழக்கவழக்கமோ கிடையாது. புதிதாக ஒன்றை பாஜகவினர் திணிக்கிறார்கள். இவ்வளவு நாளாக இல்லாமல் வெறும் தேர்தலுக்காக இதனை அவர்கள் செய்கிறார்கள். பெருமூச்சு விட்டாலே அப்பனே முருகா என்று கூறுபவர்கள்தான் தமிழர்கள். அவர்களிடம் இதெல்லாம் எடுபடாது.

’அப்பனே முருகா...என்று கூறுபவர்களிடமே வேல் யாத்திரையா?’

எப்படி வட நாட்டில் ராமருக்காக யாத்திரை நடத்தி, சமுதாயத்தை பிளவு படுத்தினார்களோ, அதேபோல் இங்கும் உண்டாக்க முனைகிறார்கள். வேல் யாத்திரைக்கு தடை என்று அரசு சொன்ன பிறகும், தடையை மீறி செல்வதற்கு அவர்களுக்கு எங்கிருந்து துணிச்சல் வருகிறது. எனவே உண்மையான பக்தி இல்லாமல் பகல் வேஷம் போட்டு வேல் யாத்திரை செல்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக என்பது விஷ சக்தி. அது எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அந்த கூட்டணி தோற்று விடும் “ என்றார்.

இதையும் படிங்க: காங்கிரசில் இணைந்தார் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்!

ABOUT THE AUTHOR

...view details