தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கட்டுமான பணி நிறைவு சான்று... விதியை நீக்கினால் அனுமதியை மீறுவோருக்கு என்ன தண்டனை?' - கட்டுமான பணி நிறைவு சான்று

கட்டுமான பணி நிறைவு சான்று இல்லாமல் மின் இணைப்பு அளிக்கப்பட மாட்டாது என்ற ஆணையை தமிழ்நாடு அரசு அவசரமாக நீக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த விதியையும் நீக்கினால் அனுமதியை மீறி கட்டடம் கட்டுவோருக்கு என்ன தண்டனை? என கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

kanimozhi
kanimozhi

By

Published : Oct 8, 2020, 10:36 AM IST

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கட்டுமான பணி நிறைவு சான்று’ இல்லாமல் மின் இணைப்பு அளிக்கப்பட மாட்டாது என்ற ஆணையை தமிழ்நாடு அரசு அவசரமாக நீக்க வேண்டி அவசியம் என்ன? இந்த விதியையும் நீக்கினால் அனுமதியை மீறி கட்டடம் கட்டுவோருக்கு என்ன தண்டனை? ஆட்சி முடிய இன்னும் ஆறே மாதங்கள் இருப்பதால் அதற்குள் வசூலை அதிகரிக்கும் பொருட்டா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் மற்றொரு ட்வீட்டில், "நகர்ப்புறங்களில் விதிகளை மீறி கட்டிம் கட்டுவோருக்கு வசதிசெய்து கொடுக்கும் மின்வாரியம், கிராமப்புறங்களில் சிறிய வீடுகளைக் கட்டுவோரை அலைக்கழிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. " எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details