இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வடமாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு பெட்டிகள் மாற்றுவதற்கான காரணம் குறித்து நேற்று மனு அளித்திருந்தோம். தற்போது தேர்தல் ஆணையம் சில விளக்கங்களைக் கொடுத்துள்ளது. ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றும்போது அரசியல் கட்சி பிரமுகர்களிடம் தெரிவிக்கவில்லை. அது தவறான முன்னுதாரணம்.
'தூத்துக்குடி சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..!' - கனிமொழி
சென்னை: "தூத்துக்குடி சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்" என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
kanimozhi
தூத்துக்குடி சம்பவம் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். முகிலன் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை" என்றார்.