தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தலைவி ரிலீஸ் தேதி அறிவிப்பு! - கங்கனா ரனாவத்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தலைவி ரிலீஸ் தேதி அறிவிப்பு
தலைவி ரிலீஸ் தேதி அறிவிப்பு

By

Published : Aug 23, 2021, 7:41 PM IST

Updated : Aug 23, 2021, 9:05 PM IST

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகிகளின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கி வருகின்றனர். உதாரணமாக மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை 'மகாநதி' என்ற தலைப்பில் படமாக எடுத்தனர்.

அதேபோல் மறைந்த முதலமைச்சரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி 'தலைவி' திரைப்படத்தை எடுத்து வருகின்றனர்.

'யு' சான்றிதழ்

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்தில் 'ஜெயலலிதா' கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம்

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமியும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்திற்காக கங்கனா தனது உடல் எடையில் 20 கிலோ அதிகரித்திருந்தார். தணிக்கை குழு 'தலைவி' படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஜெயலலிதா இன்ஸ்பிரேஷனல் பெண்

இதுகுறித்து, இயக்குநர் விஜய் கூறும்போது, "இது அரசியல் படம் கிடையாது. நாங்கள் அரசியலுக்குள் செல்லவே இல்லை. ஜெயலலிதா ஒரு இன்ஸ்பிரேஷனல் (Inspirational) பெண்.

தலைவி படம்

ஒவ்வொரு பெண்ணுக்கும் அவரின் வாழ்க்கை உத்வேகம் அளிக்கக்கூடியது. ஆணாதிக்கம் மிகுந்த இந்த உலகத்தில், ஒரு பெண் தனியாக நின்று நடிகையாகி, அரசியலிலும் கால்பதித்து இரண்டிலும் வெற்றிபெற்றவர்.

இதுகுறித்துதான் படத்தில் பேசியுள்ளோம்" எனத் தெரிவித்தார். இந்நிலையில், 'தலைவி' படம் செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 10 ரிலீஸ்

தற்போது, திரையரங்குகள் அனைத்தும் 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், புது படங்கள் ஒவ்வொன்றும் திரைக்கு வரும்.

தலைவி

இப்பட வரிசையில் 'தலைவி' படமும் செப்.10ஆம் தேதி திரையில் வெளியாகிறது.

இதையும் படிங்க: 'பார்த்திபன் - கௌதம் கார்த்திக் இணையும் "யுத்த சத்தம்"'

Last Updated : Aug 23, 2021, 9:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details