தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வெளிமாநில தொழிலாளர்களின் நிலை - அறிக்கையளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு! - மாநில மனித உரிமைகள் ஆணையம்

சென்னை: காஞ்சிபுரம் சிப்காட் தொழிற்சாலையில் பணிபுரிந்த 1,600 வெளிமாநிலத் தொழிலாளர்களின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

rights
rights

By

Published : May 5, 2020, 7:39 PM IST

இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்துள்ள மனுவில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் கார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் சிப்காட் தொழிற்சாலையில் ராஜஸ்தான், பிகார், சட்டிஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வாங்காளத்தை சேர்ந்த 1600 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

ஊரடங்கு காரணமாக வேலையிழந்துள்ள அவர்கள், கடந்த பல நாள்களாக, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பசியால் அவதிப்பட்டு வருகின்றனர். பேரிடர் நிவாரண நிதியாக பல கோடி ரூபாயை மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கும் தனியார் நிறுவனங்கள், தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை.

அதனால், பசியால் வாடும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் “ எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெளிமாநிலத் தொழிலாளர்களின் நிலை - அறிக்கையளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்புத் தலைவர் துரை. ஜெயச்சந்திரன், இதுகுறித்து 2 வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழ்நாடு தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், தொழிலாளர் நலத்துறை கூடுதல் செயலாளர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் அதிகரிக்கும் கரோனா - ரிப்பன் மாளிகையில் முதலமைச்சர் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details