இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது கட்சியின் மாநிலச் செயலாளர் சென்னை மண்டலம் (கட்டமைப்பு) பதவியை வகித்துவந்த கமீலா நாசர் தனிப்பட்ட காரணங்களால் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மநீமவிலிருந்து விடுவிக்கப்பட்ட கமீலா நாசர்! - மக்கள் நீதி மய்யம்
சென்னை: மக்கள் நீதி மய்யத்திலிருந்து கமீலா நாசர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை அலுவலகப் பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
கமீலா நாசர்
ஏப்ரல் 20ஆம் தேதிமுதல் அவர் கட்சியின் அனைத்துவிதமான பொறுப்புகளிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை இதன்மூலம் தங்களுக்குத் தெரியப்படுத்திக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.