முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளைக் கொண்டாட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அரசு அறிவித்துள்ளது.
காமராஜர் பிறந்தநாள்: நெறிமுறைகளைப் பின்பற்றி கொண்டாடுமாறு அறிவுரை - Chennai district news
சென்னை: காமராஜர் பிறந்த நாளை நெறிமுறைகளைப் பின்பற்றி கொண்டாடுமாறு அரசு அறிவித்துள்ளது.
காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்படும்
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. தற்போது, கரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் உள்ளது.
இந்நிலையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி அவரது பிறந்தநாளைக் கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.