தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விக்ரம் படத்தின் புதிய அப்டேட்! - கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படம்

கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் முதல் பாடல் வரும் 11-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

விக்ரம் முதல் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிப்பு
விக்ரம் முதல் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிப்பு

By

Published : May 9, 2022, 2:22 PM IST

கைதி, மாஸ்டர் திரைப்படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் "விக்ரம்" என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில், கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் வரும் 15-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் நாளை(மே.11) மறுநாள் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க:இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் இசை நிகழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details