இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில், கரோனா தொற்றுக்கு எதிரான போரில் என்ன செய்வார்கள் என காத்திருந்து, கடைசியாக நாமாவது ஏதாவது செய்ய வேண்டும் என பசியுடன் தவித்தவர்களுக்கு உணவு அளிப்பது போன்ற உதவிகளை மக்கள் செய்வதை சுட்டிக்காட்டியுள்ளார். இது போன்ற செயல்களை மக்கள் செய்யாமல் இருந்திருந்தால், பசி மற்றும் வறுமையின் பாதிப்பு கரோனா பாதிப்பை மிஞ்சியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது ஊரடங்கு முடிந்து வெளியே வரும் நேரத்தில், மக்களை பாதுகாக்காவிட்டால், 60 நாட்கள் வீட்டுக்குள் இருந்ததற்கு பலனில்லாமல் போய்விடும் என்று கூறியுள்ள அவர், மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் எழுந்த சிந்தனை தான் 'நாமே தீர்வு’ இயக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள், பாதுகாப்பு உபகரணங்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட தேவைகளை இந்த இயக்கம் கவனித்துக்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.