அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பெறும் ஈட்டிய விடுக்கப்புக்கான ஊதியம் ஒரு வருடத்துக்கும், அகவிலைப்படி உயர்வு 2021ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி நிறுத்தி வைப்பதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
'ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தை முடக்குகின்றன பால்கனி அரசுகள்' - கமல்ஹாசன் கடும் தாக்கு! - ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தை முடக்குகின்றன பால்கனி அரசுகள்
சென்னை: மத்திய, மாநில அரசுகள் தங்களது ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தையும் ஈட்டிய விடுப்பையும் முடக்குவதாக, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்
kamal haasan
அந்த வகையில், இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
"தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பாதிக்கும் எதையும் செய்ய கூடாது என்கிறார் பிரதமர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் தனது ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தையும் ஈட்டிய விடுப்பையும் முடக்குகின்றன. தொழில்முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்கவேண்டும் பால்கனி அரசுகள்". இவ்வாறு அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAGGED:
kamal haasan tweet