சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 18) குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களித்த பிறகு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நடைபெறுகின்ற இந்தியாவுக்கான முதல் குடிமகன் தேர்தலில் திமுக கூட்டணி கட்சி அறிவித்துள்ள வேட்பாளரை ஆதரித்து எனது வாக்கினை செலுத்தியுள்ளேன்.
கள்ளக்குறிச்சியில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு உட்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரேத பரிசோதனையில் உடல் முழுவதும் நக கீரல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் வரையில் மாவட்ட நிர்வாகம் விசாரிக்கவில்லை.
மாவட்ட கல்வி அதிகாரி ஏன் விசாரிக்கவில்லை, இறப்பு நிகழ்வதற்கு முன்பு விடுதி மானவர்களை வெளியேற்றியது ஏன், இறப்பு நிகழ்விற்கு முன்னாள் ஏன் ஆசிரியர்களுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டது. அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறேன். நடக்கக் கூடாத வன்முறை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதை யாரும் வரவேற்க்கவில்லை. அரசு உயர் அதிகாரிகளின் மெத்தன போக்குத்தான் இந்த இறப்பு சம்பவத்துக்கு காரணம்.