திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பின்னர் நடைபெறும் முதல் இ-பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஆக.13)கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் திமுக அரசின் தொலைநோக்குத் திட்டங்களை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து வருகிறார்.
இந்நிலையில், ”கடந்த அதிமுக ஆட்சியில் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட ’கலைஞர் செம்மொழித் தமிழ் விருது’ இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ஆம் தேதி வழங்கப்படும்” என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையின் இடையே அறிவித்துள்ளார்.