சென்னை:தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று (பிப்ரவரி 7) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பூர் முதல்நிலைப் பேரூராட்சித் தேர்தலை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் சொல்லப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும், தேர்தல் விதிமுறைகளையும் பின்பற்றாத காரணத்தினால் கடம்பூர் முதல்நிலைப் பேரூராட்சியின் அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
அலுவலர்கள் விதிமீறல்: கடம்பூர் பேரூராட்சித் தேர்தல் ரத்து - தூத்துக்குடி மாவட்ட செய்திகள்
தூத்துக்குடியில் உள்ள கடம்பூர் முதல்நிலைப் பேரூராட்சியின் அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் ரத்துசெய்யப்படுவதாகத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Tamil Nadu State Election Commission
மேலும், பேரூராட்சி செயல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படி தூத்துக்குடி மாவட்டத் தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியருக்கு ஆணையிடப்பட்டுள்ளது. ரத்துசெய்யப்பட்ட கடம்பூர் முதல்நிலைப் பேரூராட்சித் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.