மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கோளாறு குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கோளாறு குறித்து ஜோதிமணி எம்பி கேள்வி - மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கோளாறு
ஒவ்வொரு முறையும்,எல்லா மாநிலங்களிலும் கோளாறான இயந்தியரங்களில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் தாமரைக்கே பதிவாகிறது? ஏன் ஒருமுறை கூட மற்ற சின்னங்களில் பதிவாவதில்லை? என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு இருப்பதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக கரூர் எம்பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது இயற்கையானதாகக் கூட இருக்கலாம். அதெப்படி ஒவ்வொரு முறையும்,எல்லா மாநிலங்களிலும் கோளாறான இயந்தியரங்களில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் தாமரைக்கே பதிவாகிறது? ஏன் ஒருமுறை கூட மற்ற சின்னங்களில் பதிவாவதில்லை? என குறிப்பிட்டுள்ளார்.