சென்னை:தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஏற்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று(நவ.11) செய்தியாளர்களை சந்தித்தார்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்... அமைச்சர் அதிரடி... - minister anbil mahesh announcement for part time school teachers
தமிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுக்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்படும்" எனத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு, பகுதி நேர ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க:7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்