தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்த ஓபிஎஸ் கருத்து சரி’ - ஜே.சி.டி.பிரபாகர் - ஜே சி டி பிரபாகர்

கட்சியின் தலைமைக்கு கட்டுப்படுவதில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிகராக யாரும் கிடையாது என்றும், சசிகலாவை இணைப்பது குறித்த ஓபிஎஸ் கூறிய கருத்து சரியே என்றும் ஜே.சி.டி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

சசிகலா, ஓபிஎஸ்
சசிகலா, ஓபிஎஸ்

By

Published : Oct 27, 2021, 5:42 PM IST

சென்னை: சசிகலா விவகாரம் தொடர்பாக அதிமுகவின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் ஜே. சி.டி பிரபாகர் சேத்துப்பட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (அக்.27) செய்தியாளர்களை சந்தித்தார்.

ஓபிஎஸ் கூறியது சரி

அப்போது, “சசிகலாவை இணைப்பது குறித்து தலைமை நிர்வாகிகளுடன் இணைந்து ஆலோசனை செய்யப்படும் என ஓபிஎஸ் கூறிய கருத்து சரியே. ஓபிஎஸ் கூறிய கருத்து ஒரு தரப்புக்கு ஆதரவானது எனக் கூறுவது தவறு.

ஓபிஎஸ் - இபிஎஸ் பிரச்னை

ஓபிஎஸ், இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை என நம்புகிறேன். அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள், எதிர்கால நலன்களை நினைத்து முடிவுகள் எடுக்க வேண்டும். தற்போதைக்கு கட்சியில் சேர்த்துக்கொள்வது குறித்து எந்தக் கோரிக்கையும் யாரும் வைக்கவில்லை.

சசிகலா, ஓபிஎஸ்

வழிகாட்டுதல் குழு உறுப்பினருக்கு எந்த அதிகாரம் உள்ளது என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, எம்ஜிஆர் நீக்கப்பட்டதற்கு அவர் மட்டும் காரணம் இல்லை, உடன் இருந்தவர்கள் தான் காரணம்.

கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்ட ஓபிஎஸ்

ஆயிரக்கணக்கான இளைஞர்கள், தலைவர்கள் அதிமுகவில் தற்போது ஒதுங்கி இருக்கிறார்கள். தொலைக்காட்சி விவாதங்களில் விரைவில் கலந்து கொள்வதுதான் கட்சிக்கு நல்லது. அதிமுக தொண்டர்கள் யாரும் சசிகலாவை சுற்றுப்பயணத்தில் சந்திக்க மாட்டார்கள்.

கட்சியின் தலைமைக்கு கட்டுப்படுவதில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிகராக யாரும் கிடையாது. சசிகலா, தினகரனை சேர்ப்பதா இல்லையா என்பதில் ஓ.பன்னீர்செல்வம் குறித்த கருத்து தான் என்னுடைய கருத்தும்.

அரசியலில் நிரந்தரம் இல்லை

தமிழ்நாடு அரசியலில் அதிமுக அசைக்க முடியாத மாபெரும் இயக்கமாக வளர்ந்துள்ளது. இதற்குக் காரணம் தொண்டர்கள்தான். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் அளித்த பேட்டிக்கு பின்பு, ஒருங்கிணைப்பாளர் அளித்த பேட்டி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், துணை ஒருங்கிணைப்பாளர் கே. பி.முனுசாமி ஆகியோர் அளித்த பேட்டிகள் கட்சியில் உள்ள தொண்டர்களின் பல்வேறு கோணங்களைக் காட்டியுள்ளது.

சசிகலா, ஓபிஎஸ்

கே.பி.முனுசாமி அளித்த பேட்டி ஒரு தரப்பினரை வேதனைக்குள்ளாகி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. அரசியலில் எந்த ஒரு முடிவும் நிரந்தரம் இல்லை” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:’சேலம் ’அதிமுகவின் கோட்டை’ என நிரூபிக்க வேண்டும்’ - எடப்பாடி பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details