தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டத்துக்கு எதிரான தீபா மனுவுக்கு அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் தொடங்கப்பட்ட 'ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை' சட்டத்தை எதிர்த்து தீபா தாக்கல் செய்த மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jayalalitha's nephew deepa case
'ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை' சட்டத்துக்கு எதிரான தீபா வழக்கு

By

Published : Mar 19, 2021, 12:52 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில், தமிழ்நாடு புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் உள்ள நிலையில், அவரது சகோதரி தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஏற்கனவே இந்தச் சட்டத்தை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தீபாவின் மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கை தீபக் தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: நீட் முறைகேடால் சிபிஐ தரப்பில் கால அவகாசம் கோரல்: விசாரணை ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details