தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 13, 2021, 9:40 PM IST

ETV Bharat / city

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் ஜன.27ஆம் தேதி திறப்பு?

சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் வரும் 27ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம்
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெ. ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உடலநலக் குறைவின் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகே ஏறத்தாழ 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பளவில் பீனிக்ஸ் பறவை அமைப்புடன் கூடிய நினைவிடம், அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா, கண்காட்சி ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவந்தன.

நினைவிட நுழைவாயிலில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா சிலைகள்

இந்த பணியை கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர். கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க இரவுப்பகலாக பணிகள் நடைபெற்றுவந்தன.

இந்நிலையில், முதற்கட்டமாக ஃபீனிக்ஸ் பறவை வடிவத்திலான நினைவிடம் மட்டும் வருகிற 27ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்கு தயாராக இருக்கும் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜன.12) நேரில் சென்று ஆய்வு செய்திருந்தது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க :மோடியின் நண்பர் அதானியின் லாப வெறிக்கு சென்னை மக்களை பலியாக்குவதா? - வைகோ ஆவேசம்

ABOUT THE AUTHOR

...view details