தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி 13.48 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு விழுக்காடு அதிகரித்திருப்பது மகிழ்ச்சி: அமைச்சர் ஜெயக்குமார்! - அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: பத்து மணி நிலவரப்படி 13 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் பட்டினப்பாக்கத்தில் இருக்கும் வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு தற்போதைய நிலவரப்படி (10 மணி) 13 விழுக்காடு வாக்குகள் பதிவு ஆகியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மக்கள் கிளர்ந்து எழுந்திருக்கிறார்கள் என்றால் அதற்கான காரணம் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் அலை. திமுக கூட்டணிக்கு எதிரான அலை. இந்தத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிப்பெறும்” என்றார்.