தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

யார் இந்த ஜம்தாரா கொள்ளையர்கள்? - பயிற்சி பெற்று சைபர் மோசடியில் ஈடுபடும் ஊர் மக்கள்

பள்ளிப் படிப்பை கூட முடிக்காமல் சைபர் மோசடி குறித்து பயிற்சிப் பெற்று இந்தியா முழுவதும் மோசடிகளில் ஈடுபடும் ஜம்தாரா ஊர் மக்கள் குறித்த செய்தி தொகுப்பு...

By

Published : Oct 28, 2021, 12:11 PM IST

Updated : Oct 28, 2021, 2:42 PM IST

புது பாணியில் லட்சக்கணக்கில் மோசடி
புது பாணியில் லட்சக்கணக்கில் மோசடி

சென்னை:கோடம்பாக்கத்தைச் சேர்ந்த உதயசங்கர் (75) செப். 26ஆம் தேதி சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “சிம்கார்டு ஆவணங்கள் சமர்பிக்கப்படாமல் இருப்பதாகவும், 24 மணி நேரத்திற்குள் ஆவணங்களை சமர்பிக்கவில்லை என்றால் செல்போன் சேவை துண்டிக்கப்பட்டுவிடும் என எனது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது.

சேவையை தொடர வேண்டும் என நினைத்தால் வாடிக்கையாளர் மைய செல்போன் எண்ணிற்குத் தொடர்பு கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, நான் அவர்கள் அளித்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டேன். அப்போது உடனடியாக 5 ரூபாய் பணம் செலுத்த வேண்டுமெனவும், அதற்காக www.rechargecube.com என்ற இணையதளத்திலிருந்து ஃபாஸ்ட் சப்போர்ட் (fast support) என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமாக 5 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.

வங்கியிலிருந்த லட்சக்கணக்கான பணம் மாயம்

இதனை நம்பி செயலியை பதிவிறக்கம் செய்து எனது வங்கிக் கணக்கு எண் விவரங்களை அளித்து பணம் அனுப்பினேன். ஆனால், பணம் வந்து சேரவில்லை மீண்டும் வேறு வங்கி கணக்கிலிருந்து பணம் செலுத்துமாறும், இல்லையென்றால் சேவை துண்டிக்கப்படும் என எச்சரித்ததுள்ளனர்.

கஸ்டமர் கேரிலிருந்து அழைப்பு

இதனை நம்பி மீண்டும் தனது மனைவி வங்கி கணக்கிலிருந்து பணம் அனுப்பியுள்ளார். இதே போல் மூன்று முறை வெவ்வேறு வங்கி கணக்கிலிருந்து பணம் செலுத்தியுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு 90ஆயிரம் ரூபாய், 8 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய், 3 லட்சத்து 59 ஆயிரம் என மொத்தம் 13 லட்சத்து 9 ஆயிரத்து 984 ரூபாய் பணம் அந்த மூன்று வங்கிக் கணக்குகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்தது. இதனையடுத்து தான் ஏமாந்ததை உணர்ந்து, மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்தாரா கொள்ளையர்கள் கைது

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், மோசடி நபர்கள் பயன்படுத்திய செல்ஃபோன் எண்ணை வைத்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் அந்த செல்ஃபோன் எண் கொல்கத்தாவில் இருப்பது போல் காண்பித்தது. இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தனிப்படை அமைத்து கொல்கத்தா ஹவுரா நகருக்கு விரைந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

அங்கு, 3 பேர் கொண்ட மோசடி கும்பலை கைது செய்தனர். இவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிஷ்வ நாத் மண்டல் (25), பாபி மண்டல் (31), கொல்கத்தாவை ராம்புரோஷோத் நாஷ்கர் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள ஜம்தாரா மாவட்டம் சைபர் மோசடி கும்பல் கூடாரமாக திகழ்வது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்கள்

லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்கள்

ஜம்தாரா வாசிகளுக்குச் சொந்த ஊரில் வேலைக்கேற்ப போதுமான ஊதியம் கிடைக்காததால் பாதியிலேயே படிப்பை கைவிட்டு பிற மாநிலங்களுக்கு வேலைகளுக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அங்கு கணினி உள்பட சைபர் சம்பந்தமான அனைத்து தொழில் நுட்பங்களையும் சிறப்பாக கற்றுக்கொண்டு, பிற மாநிலங்களில் ஊடுருவி சைபர் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மோசடிக்குப் பயன்படுத்திய செல்போன்கள்

குறிப்பாக ஓடிபி மோசடி, ஏடிஎம் கார்டு காலாவதியாகி விட்டதாக கூறி மோசடி, கூப்பன் விழுந்திருப்பதாக மோசடி, லோன் பெற்றுத் தருவது என புதிய முறையில் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதே போல் வங்கி கணக்கு மற்றும் செல்ஃபோன் பயன்படுத்துவோரை குறிவைத்து செல்ஃபோன் சேவை காலாவதியாகி விட்டதாகவும், உடனே புதுப்பிக்க வேண்டுமென்றால் பணத்தை அனுப்ப வேண்டும் எனக்கூறி வங்கி கணக்கின் தகவலை திருடி அதன் மூலமாக பல பேரிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ஏடிஎம் கார்டுகள்

காவலில் எடுத்து விசாரணை

இதுபோன்றுதான் உதயசங்கரிடம் 50 நிமிடங்கள் பேசியுள்ளனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 11 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம், 148 கிராம் தங்க நகைகள், 20 செல்ஃபோன்கள், 160 சிம்கார்டுகள், 19 வங்கி கணக்கு அட்டைகள், 4 ஸ்வைப்பிங் மிஷின்கள், ஹோண்டா கார் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் ஹவுரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்று சென்னைக்கு அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

டெல்லி சென்ற காவல் துறை

இதே போல் எத்தனை பேரிடம் ஜம்தாரா கொள்ளையர்கள் மோசடி செய்துள்ளனர் என்பது குறித்து விசாரிக்க மூன்று நாள்கள் காவலில் எடுக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வங்கி, வாடிக்கையாளர் சேவை எனக்கூறி ஓடிபி எண், செயலியை டவுன்லோடு செய்ய கூறினால் பொதுமக்கள் தங்களது தகவல்களை அவர்களுக்கு அளிக்க வேண்டாம் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதையும் படிங்க:வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவரை காரில் கடத்திய கும்பல் கைது

Last Updated : Oct 28, 2021, 2:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details