தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாலையில் கிடந்த பள்ளத்தால் இளைஞர் உயிரிழப்பு - நெடுஞ்சாலைத் துறையிடம் விளக்கம் கேட்ட போலீஸ் - bus accident

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி நிலைதடுமாறி அரசுப் பேருந்தில் மோதி உயிரிழந்த சம்பவ தொடர்பாக விளக்கம் கேட்டு நெடுஞ்சாலைத் துறைக்கு காவல் துறையினர் கடிதம் எழுதியுள்ளனர்.

விபத்து ஏற்படும் சிசிடிவி காட்சி
விபத்து ஏற்படும் சிசிடிவி காட்சி

By

Published : Nov 2, 2021, 11:07 PM IST

சென்னை: பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடபழனி நோக்கி செல்லும் 5E தடம் எண் கொண்ட மாநகரப் பேருந்து சின்னமலை வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்போது அதே வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பேருந்தில் மோதியுள்ளார்.

இந்த விபத்தில் இளைஞர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்காணிப்புக் கேமரா காட்சியைக் கைப்பற்றிய காவல் துறையினர், விசாரணை செய்தபோது பள்ளத்தால் தான் விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. இந்நிலையில் மாநில நெடுஞ்சாலைத்துறையின் கீழ் அந்த சாலை வருவதால் கிண்டிப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், பள்ளம் தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.

நெடுஞ்சாலை துறை மீது குற்றச்சாட்டு

அந்த சாலையில் பள்ளம் எப்போது ஏற்பட்டது? அதற்கு காரணம் யார்? என்பது தொடர்பாக விளக்கம் கேட்டு மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கு காவல் துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.

விபத்து ஏற்படும் சிசிடிவி காட்சி

இந்நிலையில் இன்று (நவ.02) காலை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் பள்ளத்தை மண் போட்டு மூடினர். ஆனால், அதனை முறையாக செய்யவில்லை. மழை பெய்தால் மீண்டும் சாலையில் பள்ளம் ஏற்படும். மீண்டும் மீண்டும் அதே தவறை நெடுஞ்சாலைத்துறை செய்வதாக அங்கிருந்த பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:அரசுப் பேருந்தில் மோதி ஐடி ஊழியர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details