தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் விநியோகம்

11, 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அவர்கள் பயின்ற பள்ளியில் வழங்கப்படுகிறது.

மாணவர்களுக்கு சான்றிதழ் விநியோகம்
மாணவர்களுக்கு சான்றிதழ் விநியோகம்

By

Published : Sep 17, 2021, 11:53 AM IST

சென்னை:தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 2019-2021 கல்வி ஆண்டில் 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை செப்.17ஆம் தேதி முதல் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை இயக்குநரகம் அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து சென்னை அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்த மாணவிகளுக்கு 11, 12ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று (செப்.17) தலைமை ஆசிரியை சரஸ்வதி வழங்கினார்.

அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற வந்த மாணவர்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கிய பின்னரே சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு சான்றிதழ் விநியோகம்

மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர். பள்ளியில் மாணவர்கள், பெற்றோர்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றி சான்றிதழ்களை பெற்று சென்றனர்.

இதையும் படிங்க: கரோனாவால் இறந்தவரின் இறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்யலாம்

ABOUT THE AUTHOR

...view details